தேனி, போடி அரசினர் ஐடிஐயில் 4.0 தொழில் மைய திட்ட குறுகிய கால பயிற்சி நாளை முதல்
தேனி மாவட்டத்தில் தேனி, போடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 மைய திட்டத்தின்கீழ் நாளை (பிப்.
23) முதல் குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேனி மற்றும் போடிநாயக்கனூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் 4.0 மையம் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணிபுரிபவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக நாளை (பிப். 23) முதல் குறுகிய காலபயிற்சி வழங்கப்படஉள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இதில் 60 மணிநேர பயிற்சிக்கு ரூ.1250 கட்டணமாகவும், மெக்கானிக் எலக்ட்ரானிக் வாகனம் குறித்த 60 மணிநேர பயிற்சிக்கு ரூ.1250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதுகுறித்த விபரங்களுக்கு தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலை பேசி எண் 9499055765 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் தொலைபேசி எண் 9499937453 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
v