TNPSC குரூப் 4 தேர்வுக்கு 100 நாட்கள் சிறப்புப் பயிற்சி – திருச்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு திருச்சியில் கட்டணம் இல்லாமல் 100 நாள்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தற்போது டிஎன்பிஎஸ்சியால் 6244 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருச்சி மாவட்டத்தினா் இந்தப் போட்டித் தேர்வை சிறப்பாக எதிா்கொள்ளும் வகையில் கட்டணமில்லா 100 நாள் சிறப்புப் பயிற்சி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது.
இப் பயிற்சி வகுப்பில் சிறப்பு பயிற்றுநா்களை கொண்டு பயிற்சியளிப்பதுடன், மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு இலவச பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே, திருச்சி மாவட்ட தேர்வா்கள் இப்பயிற்சியில் சோந்து பயன்பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0431-2413510, 94990-55901, 94990-55902 ஆகிய எண்களிலோ, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow