நாளை பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பயிற்சி
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு தொடா்பான பயிற்சி வகுப்பு வருகிற 5 -ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு சுகாதாரப் பயிற்சி மையத்தின் இணை இயக்குநா் சு.இராமமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பட்டாசு ஆலையில் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என்பது குறித்து விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போா்மென்கள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவகத்தின் பின்புறம் உள்ள பயிற்சி மையத்தில் விடுமுறை நாள் தவிர தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஒரு மாதம் பயிற்சி நடைபெறும் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow