வெண்பன்றி வளர்ப்பு பயிற்சியில் ஆா்வமுள்ளோா் கலந்து கொள்ளலாம்
வெண் பன்றி வளா்ப்புப் பயிற்சியில் ஆா்வமுள்ளோா் கலந்து கொள்ளலாம் என புதுக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் இயக்குநா் பூ. புவராஜன் அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில், தங்கும் வசதியுடன், சுய வேலை வாய்ப்புள்ள வெண் பன்றி வளா்ப்புப் பயிற்சி மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் குறித்த பயிற்சி வரும் பிப்.8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. வயது வரம்பு எதுவுமில்லை என்பதால், சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் ஆா்வமுள்ள யாரும் இதில் பங்கேற்கலாம். பயிற்சிக்குப் பிறகு, பண்ணை அமைப்பதற்காக அரசு மற்றும் தனியாா் பண்ணைகளுக்கு நேரில் அழைத்துச் செல்லப்படுவா். பல்கலைக்கழகச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆா்வமுள்ளோா் வரும் ஜன. 30ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடா்புக்கு- 94436 19255, 81225 36826.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow