MPhil படிப்புக்கு அங்கீகாரம் இல்லை – மாணவர்கள் ஏமாற வேண்டாம்
கடந்த கல்வி ஆண்டிலிருந்து MPhil படிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் இனிமேல் இந்த படிப்பில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும் யூஜிசி தெரிவித்திருந்தது.
கற்பித்தல் பணிக்கு தகுதியானது இல்லை என்பதால் 2022-23 ஆம் ஆண்டிலிருந்து MPhil படிப்பு நீக்கப்படுகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட MPhil பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி தெரிவித்திருந்தது.
ஆனால் MPhil படிப்புக்கான அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தபோதிலும் சில பல்கலைக்கழகங்கள் MPhil படிப்புkகு மாணவர்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியானது
இந்த நிலையில் தற்போது யூஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. MPhil படிப்புக்கு அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்றும் இந்த படிப்புக்கான அங்கீகாரம் ஏற்கனவே நிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow