Friday, April 25, 2025
HomeNotesAll Exam Notesசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 1955 - 2023
- Advertisment -

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 1955 – 2023

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 1955 - 2023
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 1955 – 2023

சாகித்திய அகாதமி விருது:

  • சாகித்ய அகாடமி விருது, இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும்.
  • ஒவ்வோராண்டும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 மொழிகளில் சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும்.
  • சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம், பயண நூல், வாழ்க்கை வரலாறு, நாடகம், சுய சரிதை உள்பட அனைத்து வகை இலக்கிய வடிவங்களுக்கும் இவ்விருது வழங்கப்படும்.
பின்னணி:

சாகித்ய அகாடமி அமைப்பு, இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும், இலக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் 1954 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு அமைப்பு.

பணி:

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு உலகலாவிய இலக்கியங்களை மொழிபெயர்ப்பதுடன், சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து படைப்பாளர்களை விருதளித்து அங்கீகரிப்பது, சிறந்த ஆளுமைகளின் புத்தகங்களை வெளியிடுவது, படைப்பாளிகளை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளையும் செய்கிறது.

முதல் தமிழ் நூல்:

1955ம் ஆண்டு முதன்முதலில் தமிழ் மொழிக்கான விருது, “தமிழ் இன்பம்” என்ற கட்டுரை நூலுக்காக ரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.

தேர்வு செய்யும் முறை:
  • ஆண்டு முழுவதும் வெளிவரும் நூல்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்ய, சாகித்ய அகாடமி நிர்வாகம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி குழுவை அமைக்கும்.
  • அக்குழு குறிப்பிட்ட புத்தகங்களைத் தேர்வு செய்து மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு அனுப்பும்.
  • ஒவ்வொரு கருத்தாளரும் இரண்டு நூல்களை பரிந்துரை செய்வார்கள்.
  • அவ்விதம் பரிந்துரை செய்யப்பட்ட நூல்களில் இருந்து சாகித்ய அகாடமி அமைக்கும் நடுவர் குழு. ஒரு நூலை ஏகமனதாக தேர்வு செய்யும்.
  • அந்த ஆண்டில் சிறந்த நூல்கள் ஏதும் வரவில்லை என்று கருதினால் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 1955 – 2023
ஆண்டுபடைப்புஆசிரியர்குறிப்பு
2023நீர்வழிப் படூஉம்தேவி பாரதிபுதினம்
2022காலா பாணிமு. ராஜேந்திரன்புதினம்
2021சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவைஅம்பைசிறுகதைத் தொகுப்பு
2020செல்லாத பணம்இமையம்புதினம்
2019சூல்சோ. தர்மன்புதினம்
2018சஞ்சாரம்எஸ். ராமகிருஷ்ணன்புதினம்
2017காந்தள் நாட்கள்இன்குலாப்கவிதைகள்
2016ஒரு சிறு இசைவண்ணதாசன்சிறுகதைகள்(1)
2015இலக்கியச் சுவடுகள்ஆ. மாதவன்புதினம்
2014அஞ்ஞாடிபூமணிபுதினம்
2013கொற்கைஜோ டி குரூஸ்புதினம்
2012தோல்டேனியல் செல்வராஜ்புதினம்
2011காவல் கோட்டம்சு. வெங்கடேசன்புதினம்
2010சூடிய பூ சூடற்கநாஞ்சில் நாடன்சிறுகதைகள்
2009கையொப்பம் புவியரசுகவிதை
2008மின்சாரப்பூமேலாண்மை பொன்னுசாமிசிறுகதைகள்
2007இலையுதிர் காலம்நீல. பத்மநாபன்புதினம்
2006ஆகாயத்துக்கு அடுத்த வீடுமு.மேத்தாகவிதை
2005கல்மரம்ஜி. திலகவதிபுதினம்
2004வணக்கம் வள்ளுவஈரோடு தமிழன்பன்கவிதை
2003கள்ளிக்காட்டு இதிகாசம்வைரமுத்துபுதினம்
2002ஒரு கிராமத்து நதிசிற்பி பாலசுப்ரமணியம்கவிதை
2001சுதந்திர தாகம்சி. சு. செல்லப்பாபுதினம்
2000விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்தி. க. சிவசங்கரன்விமர்சனம்
1999ஆலாபனைஅப்துல் ரகுமான்கவிதை
1998விசாரணைக் கமிஷன்சா. கந்தசாமிபுதினம்
1997சாய்வு நாற்காலிதோப்பில் முகமது மீரான்நாவல்
1996அப்பாவின் சிநேகிதர்அசோகமித்ரன்சிறுகதைகள்
1995வானம் வசப்படும்பிரபஞ்சன்புதினம்
1994புதிய தரிசனங்கள்பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)புதினம்
1993காதுகள்எம். வி. வெங்கட்ராம்புதினம்
1992குற்றாலக் குறிஞ்சிகோவி. மணிசேகரன்புதினம்
1991கோபல்ல கிராமத்து மக்கள்கி. ராஜநாராயணன்புதினம்
1990வேரில் பழுத்த பலாசு. சமுத்திரம்புதினம்
1989சிந்தாநதிலா. ச. ராமாமிர்தம்சுயசரிதை
1988வாழும் வள்ளுவம்வா. செ. குழந்தைசாமிஇலக்கிய விமர்சனம்
1987முதலில் இரவு வரும்ஆதவன்சிறுகதைகள்
1986இலக்கியத்துகாக ஒரு இயக்கம்க. நா. சுப்பிரமணியம்இலக்கிய விமர்சனம்
1985கம்பன் : புதிய பார்வைஅ. ச. ஞானசம்பந்தன்இலக்கிய விமர்சனம்
1984ஒரு காவிரியைப் போலலட்சுமி திரிபுரசுந்தரிபுதினம்
1983பாரதி : காலமும் கருத்தும்தொ. மு. சிதம்பர ரகுநாதன்இலக்கிய விமர்சனம்
1982மணிக்கொடி காலம்பி. எஸ். ராமையாஇலக்கிய வரலாறு
1981புதிய உரைநடைமா. ராமலிங்கம்விமர்சனம்
1980சேரமான் காதலிகண்ணதாசன்புதினம்
1979சக்தி வைத்தியம்தி. ஜானகிராமன்சிறுகதைகள்
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்வல்லிக்கண்ணன்விமர்சனம்
1977குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதிபுதினம்
1975தற்கால தமிழ் இலக்கியம்ஆர். தண்டாயுதம்இலக்கிய விமர்சனம்
1974திருக்குறள் நீதி இலக்கியம்கே. டி. திருநாவுக்கரசுஇலக்கிய விமர்சனம்
1973வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்புதினம்
1972சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்நாவல்
1971சமுதாய வீதிநா. பார்த்தசாரதிபுதினம்
1970அன்பளிப்புகு. அழகிரிசாமிசிறுகதைகள்
1969பிசிராந்தையார்பாரதிதாசன்நாடகம்
1968வெள்ளைப் பறவைஅ. சீனிவாச ராகவன்கவிதை
1967வீரர் உலகம்கி. வா. ஜகன்னாதன்இலக்கிய விமர்சனம்
1966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடும. பொ. சிவஞானம்சரிதை நூல்
1965ஸ்ரீ ராமானுஜர்பி. ஸ்ரீ ஆச்சார்யாசரிதை நூல்
1963வேங்கையின் மைந்தன்அகிலன் (பி. வி. அகிலாண்டம்)புதினம்
1962அக்கரைச்சீமைசோமு (மீ. ப. சோமசுந்தரம்பயண நூல்
1961அகல் விளக்குமு.வரதராசனார்புதினம்
1958சக்கரவர்த்தித் திருமகன்சி. ராஜகோபாலச்சாரிஉடைநடை
1956அலை ஓசைகல்கி கிருஷ்ணமூர்த்திபுதினம்
1955தமிழ் இன்பம்ரா. பி. சேதுப்பிள்ளைகட்டுரை
இந்த லிங்க் Save பண்ணிக்கோங்க தேர்வின் போது தேவைப்படும்

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -