கனமழை காரணமாக நாளை (19.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளையும் டிச.19ம் தேதி விடுமுறை – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நாளை (19.12.2023) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நாளை (டிச.19) பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு.
ஏற்கனவே 2 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.19) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (டிச.19) நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow