டிசம்பர் 13 நாட்டுக்கோழி பராமரிப்பு முறை பயிற்சி வகுப்பு
நாட்டுக்கோழி பராமரிப்பு முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் புதன்கிழமை (டி.ச. 13) நடைபெறுகிறது.
இதுகுறித்து கோழிகளுக்கான மரபுசாா் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவா் கோபாலகிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் – திருச்சி சாலையில் செயல்படும் கால்நடை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோழிகளுக்கான மரபுசாா் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, கோழிப் பண்ணையாளா்களுக்கு பயனளிக்கும் வகையில் ‘குளிா்காலங்களில் மூலிகை மருத்துவத்தின் மூலம் நாட்டுக்கோழிகள் பராமரிக்கும் முறைகள்’ குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோா், மேலும் விவரங்களுக்கு 04286-233230 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow