தமிழக வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் டிசம்பர் 11ல் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்
மத்திய அரசின் பொதுபயிற்சி இயக்கம் மற்றும் தமிழக வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில், பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம், திருப்பூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.அன்று காலை 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடைபெறும்.
இதில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கான, தொழில் பழகுனர்கள் (அப்ரண்டிஸ்) தேர்வு செய்யப்படுகின்றனர்.தேர்வு செய்யப்படும் தொழில் பழகுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுனர் சான்று வழங்கப்படும்.
இந்த சான்றுபெற்றவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்.தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப, தொழில் பழகுனர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சி பெற்றவர்கள், அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள் 8, 10, பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உரிய சான்றுகளுடன் முகாமில் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் பின், காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை அணுகலாம்.
திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை 94990 55695, 0421 2230500, 98947 83226, 94990 55700, 94990 55696 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow