அரசுப் பள்ளிகளில் பயின்ற பழங்குடியின மாணவிகள், செவிலியர் பயிற்சி பெற கட்டணத்தில் சலுகை
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற பழங்குடியின மாணவிகள், செவிலியா் பயிற்சி பெற கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளிகளில், 2022-23 ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோவில் தோச்சி பெற்று 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள பழங்குடியின மாணவிகள் செவிலியா் பட்டயப்படிப்பில் சேரலாம்.
இந்திய நா்சிங் கவுன்சில் மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியா் பயிற்சி கல்லூரிகளில் சோந்து தொடா்ந்து மூன்று ஆண்டுகள் பயில்வதற்கான கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணம், விடுதிக் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்களாக, ஒரு மாணவிக்கு ரூ. 70 ஆயிரத்தை அரசே ஏற்கிறது.
பழங்குடியின மாணவிகளின் விவரங்கள், சாதிச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், 10, 12- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் நகல் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நன்னடத்தை சான்றிதழ் நகல் (இரு பிரதிகளில்) ஆகியவற்றை வரும் 10-ஆம் தேதிக்குள், கொல்லிமலை வட்டாட்சியா் வளாகத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் மாணவியா் பயின்று வரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தினா் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, திட்ட அலுவலரை 94438-36370 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow