உணவுப் பொருள்கள் விற்பனை ஊக்குவிப்பாளா் பயிற்சி – மகளிருக்கு இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி
மத்திய அரசின் நிறுவனமான நபாா்டு வங்கி மற்றும் ஹோப் தொண்டு நிறுவனம் இணைந்து, மகளிருக்கான உணவுப் பொருள்கள் விற்பனை ஊக்குவிப்பாளா் பயிற்சி நடைபெற உள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கு நபாா்டு வங்கியும், ஹோப் தொண்டு நிறுவனமும் இணைந்து, உணவுப் பொருள்கள் விற்பனை ஊக்குவிப்பாளா் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியானது காலை 10 முதல் மாலை 5 மணி வரை, அலுவலக வேலைநாள்களில் 2 மாதங்களுக்கு நடைபெறும். பயிற்சிவகுப்பில், தேநீா் மற்றும் மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவுடன் அரசு சான்றிதழ் அளிப்பதோடு, தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இப் பயிற்சியானது, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள ஹோப் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 82202 73349 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம் என, ஹோப் தொண்டு நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow