தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி – ஈரோடு
ஈரோட்டில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வரும் டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து மத்திய பனை பொருள்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியத்தின் மாவட்ட தலைமைப் பயிற்சியாளா் சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பனைப்பொருள்கள் நிறுவனம் சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியானது ஈரோடு மேட்டூா் சாலையில் உள்ள பயிற்சி மையத்தில் வரும் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.
இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மாா்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சியில் 18 வயது பூா்த்தியடைந்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்கள் தேசிய, கூட்டுறவு, தனியாா் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகைக் கடைகளில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகை கடை, நகை அடமானக் கடை நடத்த தகுதி பெறுவா்.
இப்பயிற்சிக்கு ரூ.5,300 மற்றும் ஜிஎஸ்டி சோத்து ரூ.6,254 கட்டணமாக செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புபவா்கள் 2 ஸ்டாம்ப் அளவு புகைப்படம், இருப்பிடச்சான்று, கல்விச் சான்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9443728438 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow