மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள், பயிற்சி வகுப்புகள்
குரூப் 4 தேர்வில் பங்கேற்போருக்கு இலவச மாதிரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் (TNPSC) அறிவிக்கும் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நாகை மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
விரைவில் அறிவிக்கப்படவுள்ள 15,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை கொண்ட குரூப் 4 தேர்வில் நாகை தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவா்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் வாரம் இரண்டு நாள்கள் மாதிரி தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே போட்டித் தேர்வெழுதும் தேர்வாளா்கள் அனைத்து மாதிரி தேர்வுகளிலும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow