SSC தேர்வுக்கான புதிய கால அட்டவணை வெளியீடு
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக SSC தேர்வாணையத்தின் மூலம் 2024ம் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தற்காலிக கால அட்டவணை ஆனது 07.11.2023 அன்று https://ssc.nic.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் தேர்வுகளின் பெயர்களும், தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் நாள், தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இத்தகைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகள் மூலம் Stenographer, UDC. LDC, Constable (GD), Sub-Inspector, Junior Engineer போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- SSC CGL 2024 (Tier 1) தேர்வுக்கான அறிவிப்பானது 11.07.2024 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வானது 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.
- SSC Department Competitive Examination 2024 அறிவிப்பானது வருகின்ற ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வானது 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது.
- SSC JE 2024 (Paper 1) தேர்வுக்கான அறிவிப்பானது 29.02.2024 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வானது 2024ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ளது.
- SSC CHSL 2024 (Tier – I) தேர்வுக்கான அறிவிப்பானது 02.04.2024 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத்தேர்வானது 2024ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெறவுள்ளது.
- SSC Constable (GD) தேர்வுக்கான அறிவிப்பானது 27.08.2024 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வானது 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெறவுள்ளது.
- இதை தவிர மற்ற தேர்வுகள் குறித்த விவரங்களை அறிய விரும்பும் நபர்கள் பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி கால அட்டவணை பெற்று தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Official Website: Click Here