நீச்சல், இறகுப்பந்து விளையாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல்குளம் புதுப்பிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு இரு வாரங்களில் திறக்கப்படவுள்ளதால் இங்கு பயிற்சி பெற வீரர்கள், பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.இறகுப் பந்து விளையாட்டு சந்தா உறுப்பினர்கள்- காலை 5:00 முதல் 6:00 மணி வரையும், காலை 6:00 முதல் 7:00 மணி வரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை பெண்கள், -மாலை 4:00 முதல் 5:00 மணி வரை பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு மாதச் சந்தா கட்டணம் ரூ. 250, 18 வயதிற்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.300, பொதுமக்கள் ரூ.600 செலுத்த வேண்டும். தற்போது நீச்சல் குளத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து சில நாட்களில் திறக்கப்பட உள்ளது.
இதற்கு பயிற்சி கட்டணம் ஆன்-லைன் மூலம் செலுத்த வேண்டும். நேரடியாக செலுத்த பெயர், அலைபேசி எண், ஆதார் கார்டு எண் கொண்டு வர வேண்டும். தனிநபர் ஒரு மணி நேரம் பயிற்சிக்கு ரூ.50 மற்றும் ஜி.எஸ்.டி.,யுடன் ரூ.59 செலுத்த வேண்டும். தனி நபர் மாதச் சந்தா ரூ.700, அரையாண்டு ரூ.3000, ஆண்டு சந்தா ரூ.4000, ஆண்டு குடும்ப கட்டணம்(2 பேர்) ரூ.6000, குடும்ப கட்டணம்(4 பேர்) ரூ.7500 கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow