செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், 108 ஆம்புலன்சில் ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 5ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, ஆம்புலன்ஸ் நிர்வாகம் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், 108 ஆம்லபுன்சில் ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், வரும் 5ம் தேதி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது.
மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள், பி.எஸ்.சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., பிளஸ் 2விற்கு பின் இரண்டு ஆண்டுகள் படித்து இருக்க வேண்டும்.
அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம் 15,435 ரூபாய். எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல் நடத்தப்படும்.ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிப்போர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வயது வரம்பு 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும். மாத ஊதியம் 15,235 ரூபாய்.எழுத்து, தொழில்நுட்பத்திறன், கண் பார்வை திறன், சாலை விதிகளுக்கான தேர்வுகள் மற்றும் மனித வளத்துறை நேர்காணல் நடத்தப்படும்.
இதில், இலவச தாய் – சேய் நல வாகன ஓட்டுனர்களுக்கான பணியிடம் நிரப்பப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 – 2888 8060, 2888 8077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow