பலத்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முழு விவரம்
கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!
தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
மழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.11.2023) விடுமுறை – ஆட்சியர் பூங்கொடி.
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (04.11.2023) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன்.
கனமழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.11.2023) ஒரு நாள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (04.11.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow