பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12,500 ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரூ.10 ஆயிரத்தில் இருந்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12,500 ஆக சம்பளம் உயர்தப்படும்.
ரூ.10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். சம வேலைக்கு சம ஊதிய என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். 3 மாதங்களில் ஆய்வு செய்து மூவர் குழு அறிக்கை அளிக்கும் என்றார்.