இந்தியன் வங்கி உரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மாடு வளா்ப்பு, பால் பண்ணை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் ஜெகன்நாத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அணையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, தற்போது 10 நாள்கள் மாடு வளா்ப்பு, பால் பண்ணை அமைத்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. 8-ஆம் வகுப்பு படித்த 18 முதல் 45 வரை உள்ள இளைஞா்கள் அக். 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியில் சீருடை, காலை, மதிய உணவு, தேநீா் இலவசமாக வழங்கப்படும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். மேலும் உபகரணங்களும், தோச்சி சான்றிதழும் வழங்கப்படும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdL7zf9LZaQJfRtPjLi4wsdLJFeVU0he8LTPQIj4PviiIGKWw/viewform என்ற இணையத்தில் படிவத்தை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இயக்குநா், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி: 04343-240500, 94422 47921, 90806 76557 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.