மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்கவிருக்கும் பெண்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக, மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில், ‘உத்யோகினி’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம். மாற்றுத்திறனாளி மற்றும் கணவனை இழந்த பெண்கள் தகுதியின் அடிப்படையில் ரூ.3 லட்சத்திற்கு மேல் பெறலாம். 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்.
மேலும், கிரெடிட்/சிபில் ஸ்கோர் மதிப்பெண் நன்றாக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வங்கிகளைத் தொடர்புகொள்ளவும்.