இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக LPG மானியம் ரூ.200 லிருந்து ரூ. 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- முதலில், அருகில் உள்ள LPG விற்பனை நிலையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை கேட்டு பூர்த்தி செய்யலாம். மேலும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- அடுத்ததாக, ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு அறிக்கை, இருப்பிட சான்று, பிபிஎல் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து LPG கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும்.
- இறுதியாக விவரங்கள் சரிபார்க்கப்பட்டு மானியம் உறுதி செய்யப்படும்.