ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின பிளஸ் 2 படித்த, படிக்கும் மாணவர்கள் தாட்கோ மூலம் சட்டக்கல்லுாரி நுழைவுத் தேர்விற்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்குகிறது.
இதன்படி சட்ட பல்கலை மூலம் அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.அதன்படி 18 முதல் 25 வயது நிரம்பிய பிளஸ் 2 முடித்தவர்கள், நடப்பாண்டில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள மாணவர்கள் www.tahdco.comல் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும், என்றார்.