ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்காக பல்வேறு செயல் பாடுகளை ஆன்லைன் வழியாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி பிளஸ் 2-க்குப் பிறகு என்ன படிக்கலாம், எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பன குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கும் விதமாக ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆலோசனை அமர்வை இணையம் வழி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ இணைந்து வழங்கி வருகிறது. இந்தத் தொடரின் 2-ம் அமர்வு நாளை மறுநாள் (ஜூன் 10, புதன் கிழமை) மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடக்க உள்ளது.
இதில், ‘உயர்வுக்கு ஹோட்டல் மேலாண்மை கல்வி’ எனும் தலைப் பில் ஹோட்டல் மேலாண்மை கல்வியின் முக்கியத்துவம் குறித்து தி ரெசிடென்ஸி ஹோட்டல்ஸ் முதன்மை செயல் அதிகாரி பி.கோபிநாத், ஐ.எஃப்.சி.ஏ. நிறுவனரும் பொதுச் செயலாள ருமான டாக்டர் செஃப் சவுந்தர் ராஜன், எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இயக்குநர் டாக்டர் ஆண்டனி அசோக்குமார் ஆகியோர் உரை யாற்றுகிறார்கள்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் ரூ.99/- கட்டணம் செலுத்தி, http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்கில் பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் 2 மாத இந்து தமிழ் இ-பேப்பர் இலவசமாகப் பார்க்கலாம். கூடுதல் தகவல் களுக்கு 9840961923, 8870260003, 9003966866 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்