உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம் – ஜூன் 17
வாஞ்சிநாதன் நினைவு தினம் – ஜூன் 17
லியாண்டர் பயஸ் பிறந்த தினம் – ஜூன் 17
2019 ஆம் ஆண்டில் அதிக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்த நாடுகள் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
2018 ஆம் ஆண்டில் உலகளவில் இந்தியா 12வது இடத்தில் இருந்தது.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடு – இந்தியா
சர்வதேச மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகள் காணப்படுவதை அளவிடும் உலக போட்டி திறன் குறியீட்டில் நடப்பாண்டில் இந்திய 43 வது இடத்தை பிடித்துள்ளது.
மனிதவள மேம்பாட்டுத்துறை “நிஷாங்-2020″என்ற கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் தேசிய அளவில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது
விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படைக்கு புதிய தலைமை பணியாளராக அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்
தனியார் வங்கிகளின் கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய RBI அமைத்த 5 பேர் கொண்ட குழுவின் தலைவராக பி.கே.மொஹந்தி நியமிக்கப்பட்டுள்ளார்
பால் ஷிராமிக் வித்யா யோஜனாவை உத்திரப்பிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது
பால் ஷிராமிக் வித்யா யோஜனா எதற்கு? குழந்தை தொழிலாளர்களுக்கு (8 முதல் 18 வரை) கல்வி கற்பிக்கும் திட்டம்