இளைஞர் அமைதி மையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச மனிதவள மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
இளைஞர் அமைதி மையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மனிதவளம், சுயமுன்னேற்றம், ஒழுக்க மேலாண்மை பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாமில், மனித வளம், உயர் எண்ணங்கள், தன்னம்பிக்கை, இலக்குகளை அடைதல், பேச்சாற்றல், கல்வியின் முக்கியத்துவம், உயர்கல்வி, போட்டி தேர்வுகளில் பங்கேற்றல், ஒழுக்க மேலாண்மை, சமூக ஊடகங்களை பாதுகாப்போடு கையாளுதல் தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மற்றவர்களோடு பழகும் முறை, மதுபோதை, திரைப்பட கவர்ச்சியால் தனிமனிதர்கள் வாழ்விலும், சமூகத்திலும் ஏற்படும் தீமைகள், வாசிப்பு பழக்கம், நுாலகம் மூலம் ஏற்படும் நன்மைகள், மன உறுதி, , நேர்மறை எண்ணங்கள் உட்பட பல்வேறு ஆளுமை தலைப்புகளில் பயிற்சி அந்தந்த பள்ளிகளில் அளிக்கப்பட உள்ளது.
முகாமில் 10 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் ம பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த இலவச பயிற்சி முகாமை தங்கள் பள்ளிகளில் நடத்த விரும்பும் தலைமை ஆசிரியர்கள், மேல்நிலை பள்ளி முதல்வர்கள், இளைஞர் அமைதி மையம், ஆனந்தரங்கப்பிள்ளை நகர், புதுச்சேரி 8 என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் விருப்பங்களை தபால் மூலம் தெரிவிக்கலாம் என அமைதி மையத்தின் நிறுவனர் அரிமதி இளம்பரிதி தெரிவித்துள்ளார்.