தொழில் முனைவோா், சுய தொழில் தொடங்க விரும்புவோா், விவசாயிகளுக்காக இலவச ஜப்பானிய காடை வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு, கோழி பண்ணை சாலையில், செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்.19ஆம் தேதி (வியாழக்கிழமை) காடை வளா்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.
இதில் சேர விரும்புவோா் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பயிற்சி மையத்தில் நேரடியாக வந்து கலந்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் வே. ஜெயலலிதா தெரிவித்துள்ளாா்.
மேலும், விவரங்களுக்கு 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.