அரசுப்பணியில் சேர வேண்டும் என கனவு, லட்சியம் அனைவருக்கும் இருக்கும். இதில் சிலர் கடின உழைப்பால் தோல்வியில் துவளாமல் இளைக்கை எட்டி சிகரம் தொடுகின்றனர். 2019 குரூப் 4 தேர்வில் தேனி திண்ணை பயிற்சி மையத்தில் பயின்ற 40 பேர் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்து சாதித்துள்ளார்.
இதில் ஒருவர் தான் தேனி அல்லிநகரம் கம் போஸ்ட் ஓடை தெருவை சேர்ந்த ஈஸ்வரன் 40.
இவரது பெற்றோர் பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள். அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த இவருக்கு கல்லூரியில் படிக்க வசதி இல்லை. இங்கு பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்தார். திருமணம் 2 குழந்தைகள் குடும்ப சுமைகளுடன் குறைந்த ஊதியத்தில் 17 ஆண்டுகள் சிரமப்பட்டார். பஞ்சாலையில் வேலை செய்து படித்து அரசு தேர்வில் வெற்றி பெற்ற சீனிவாசன் என்பவர் ஆலோசனை வழங்கினார். அவரின் ஊக்கம் போட்டித்தேர்வு எழுதும் எண்ணம் ஏற்பட்டது. டி. என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த தொலை நிலைக் கல்வியில் பி.லிட்., தேர்ச்சி பெற்றார். 4 முறை எழுதியும் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெற்றி கை நழுவியது.
ஆனாலும் மனம் தளரவில்லை. பெட்ரோல் பங்கில் வேலை செய்து நள்ளிரவு வரை படிப்பார்.
விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் இலவச பயிற்சியை தீவிரமாக்கினார். பகல் முழுவதும் மையத்தில் செலவிட்டார். 2019 குரூப் 4 தேர்வில் 257 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து தேனி அரசு பாலிடெக்னிக்கில் இளநிலை உதவியாளராக சேர்ந்தார். ஈஸ்வரன் கூறியாதவது. தொடர் முயற்சியும், கடின உழைப்பும் வெற்றிக்கு காரணம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற வைர வரிகளுக்கு ஏற்ப அரசு பணி செய்வேன் என்றார். இவரை வாழ்த்த: 99527 71773
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download