TNPSC உதவி ஜெயிலர்:
TNPSC உதவி ஜெயிலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) (தமிழ்நாடு சிறை துணை சேவை) பிரிவில் 59 காலியிடங்கள் உள்ளதாக 12.04.203 அன்று அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மேலும், இப்பணிக்கான விண்ணப்பங்கள் அறிவிப்பு வெளியான நாள் முதல் துவங்கி 11.05.2023 வரை பெறப்பட்டது.
இந்நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி (01.07.2023) அன்று தேர்வு நடக்க உள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ தலத்தில் இருந்து நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- முதலில் tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன் முகப்பு பக்கத்தில் இருக்கும் ‘அசிஸ்டண்ட் ஜெயிலர் ஹால் டிக்கெட்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
- இப்பொழுது உங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.
OFFICIAL ANNOUNCEMENT: Click Here
HALL TICKET: Download Here