Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் வழங்குகிறது
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிவில் சர்வீசஸ் பணிக்கான
முதல் நிலை தேர்வில்
வெற்றி பெற்ற அனைவரையும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்
வாழ்த்துகிறது. சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்
கடந்த 54 ஆண்டுகளாக இயங்கி
வருகிறது. இந்த மையம்
தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாக
கிராமப்புற பகுதிகளில் உள்ள
ஏழை மாணவர்களுக்கு பயிற்சி
அளித்து வருகிறது.
ஆண்டுதோறும் சிவில்
சர்வீசஸ் பணி தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய
நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில் இங்கு
பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. இந்த
பயிற்சி மையத்தில் பசுமை
சூழலுடன் வகுப்பறைகள், தாங்கும்
இடவசதி, தரமான உணவு
வழங்கும் விடுதி, சிறந்த
நூலகம் உள்பட அணைத்து
வசதிகளும் அமைத்துள்ளன.
மாணவர்களுக்கு இங்கு கட்டணமின்றி உணவும்,
அருமையான உணவும், அருமையான
இயற்கை சூழலில் தங்கி
படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிப்பதுடன் மாணவர்கள் தங்களை முதன்மை
தேர்வுக்கு தயார்படுத்துக் கொள்ளும்
வகையில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
இதுதவிர
முதன்மை தேர்வு எழுதும்
தேர்வர்களுக்கு மாதம்
ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. தமிழக
மாணவர்கள் எங்கு பயிற்சி
பெற்று முதல் நிலை
தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த பயிற்சி
மையத்தில் பயிற்சி பெற
அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த
மையத்தில் இந்த ஆண்டு
(2020) 140 பேர் தங்கி படிக்க
சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய
குடிமைப்பணி தேர்வு பயிற்சி
மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் வருகிற 3.ம்
தேதி (நாளை மறுதினம்)
மாலை 6 மணி வரையில்
www.civilservicecoaching.com என்ற
இணையதளத்தில் தங்கள்
பெயரை பதிவு செய்து
கொள்ளலாம்.
இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும் மாணவர்கள்
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள படி வருமான வரி
சான்றிதழ் கேட்டு விண்ணப்பத்துடன் இணைந்து அளிக்க வேண்டும்.
வருமானம் தொடர்பாக உரிய
அதிகாரிகள் அளித்த வருமான
வரி சார்ந்தறிதழை குரிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில்
சேரும்போது ஒப்படைக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின
தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசு
விதிகளுக்கு உட்பட்டு பதிவு
செய்தவர்களில் 225 பேர்
தேர்தெடுக்கப்பட்டு குரிமை
பணி முதன்மை தேர்வுக்கு பயிற்சியளிக்கப்பட்ட இருக்கிறார்கள். இதில் 140 மாணவர்கள் இலவசமா
தங்கி படிக்க சிறப்பான
வழி முறைகள் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளன. 85 தேர்வர்கள் தினந்தோறும் வருகைபுரிந்து பறிச்சி
பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.