இனி 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு!! தேசியக் கல்விக்கொள்கை புதிய அதிரடி அறிவிப்பு!!
2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை மற்றும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைகழகங்களும் இணைத்து 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிபிற்கு கல்வி கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, இணையத்தள முகவரி, நுழைவுத் தேர்வு போன்ற தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளது.
அதன்படி இந்த பட்டப்படிப்பில் சேருவதற்கு, தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடந்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் என்.சி.இ.டி. என்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதனையடுத்து அந்த நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இந்த மாதம் இறுதியில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளது. இந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதற்கான இணையத்தள முகவரியும் மற்றும் அதற்கான பதிவுகள் இணையதள வாயிலாக தற்போது தொடங்கி உள்ளது.
மேலும் விண்ணப்பிக்க ஏதுவாக நாடு முழுவதும் 34 உதவி மையங்களை தற்போது என்.டி.ஏ அமைத்துள்ளது.
இணையத்தள முகவரி: https://ncet.samarth.ac.in என்ற இணையத்தள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் திருத்தம்: ஜூலை 20, 21 ஆம் தேதிகள் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தேர்வு முறை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் 13 மொழிகளில் கணினி வழி மூலம் தேர்வு நடத்தப்பட்டும்.
தேர்வு மையம்: நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ள www.nta.ac.in என்ற இணையதள மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது