இந்தியாவில் முதல்முறையாக ரூ.999 விலையில், யுபிஐ பேமெண்ட், 4ஜி இன்டர்நெட், அன்லிமிடெட் மொபைல் டேட்டா மற்றும் கால்ஸ், ஜியோ ஆப்ஸ் என்று நம்ப முடியாத அம்சங்களுடன் ஜியோ (Jio) நிறுவனத்தின் ஜியோ பாரத் போன் (Jio Bharat Phone) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மார்க்கெட்டில் எவ்வளவு போன்கள் வந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு ஜியோ போன்கள் (Jio Phones) மீது அதிக ஆர்வம் இருக்கும். ஏனென்றால், அந்த போன்களில் அவ்வளவு சலுகைகளை கொடுக்கப்படும். அவ்வளவு ஏன்? மாதாந்திர ரீசார்ஜ் செலவு கூட மிக மிக குறைவாகவே இருக்கும்.
இதனாலேயே, விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும், ஜியோ போன்களை வாங்கிப் போட்டு அன்லிமிடெட் டேட்டா மற்றும் கால்ஸ் சலுகைகளை மலிவான விலையில் பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மொபைல் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும் படி ஜியோ நிறுவனத்தின் ஜியோ பாரத் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜியோ பாரத் போனில் இருக்கும் அம்சங்களையும், சலுகைகளையும் கேட்டால், உடனே ஆர்டர் போட்டு விடுவீர்கள். இந்த போனில் என்னென்ன இருக்கிறது? எப்போது ஆர்டர் செய்யலாம்? மாதாந்திர மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் கட்டணம் எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.
இதுவொரு ஃபீச்சர் போனாகும். இருப்பினும், யுபிஐ பேமெண்ட் (UPI Payment), 4ஜி இன்டர்நெட் (4G internet), அன்லிமிடெட் மொபைல் டேட்டா மற்றும் கால்ஸ் (Unlimited Mobile Data And Calls), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சாவன் (JioSaavn) உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் (Jio Apps) பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த போனோடு ஜியோ பாரத் பிளான்கள் (Jio Bharat Plans) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த போனை வாங்கினால், ஜியோ பாரத் மாதாந்திர பிளான் (Jio Bharat Monthly Plan) மூலம் மாதத்துக்கு ரூ.123 மட்டும் செலுத்தி 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல ஜியோ பாரத் வருடாந்திர பிளான் (Jio Bharat Annual Plan) மூலம் ரூ.1,234 செலுத்தி 365 நாட்களுக்கு நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த ஜியோ பாரத் போனின் விற்பனை ஜூலை 7ஆம் தேதி தொடங்குகிறது. இதுவொரு பீட்டா டெஸ்டிங் மட்டுமே. முதலில் 10 லட்சம் போன்களை விற்பனை செய்து, அதற்கான வரவேற்பு மற்றும் தேவைகளை ஆராய்ந்து, அதன்பின் அடுத்தடுத்து விற்பனைகள் அதிகரிக்கப்படும். இந்த போன்களை ஜியோ ஆப் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ஆர்டர் செய்துகொள்ள முடியும்.
இந்த போனின் முழு அம்சங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், சிறிய ஸ்கிரீன் மற்றும் கீபோர்டு, கேமரா, டார்ச்லைட் மற்றும் எப்எம் ரேடியோ ஆகிய அம்சங்கள் இருப்பதை உறுதி செய்ய முடிகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.