Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
Last Minute Tips – தமிழக காவல்துறை தேர்வு 2020
தமிழக காவல் துறை தேர்வானது 13.12.2020 (நாளை) நடைபெற உள்ளது
To download Hall Ticket: ClickHere
தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள்:
விண்ணப்பதாரர்களின் அழைப்பு கடிதம் மற்றும் அசல் அடையாள அட்டை
நீலம் மற்றும் கருப்பு நிற பந்து முனை பேனா
அனுமதிக்கப்படாத பொருட்கள்:
தேர்வு சம்பத்தப்பட்ட புத்தகங்கள், கைடுகள், விடைகள் அடங்கிய சிறு குறிப்புகள் மற்றும் மற்றும் தேவையில்லாத பொருட்கள்
செல்போன், கால்குலேட்டர் மற்றும் ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்கள்
பொதுவான விதிமுறைகள்:
தேர்வறைக்குள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
தேர்வு நேரம் 11.00 மணி முதல் 12.20 மணி வரை.
தேர்வு அறைக்குள் 11.15 மணிக்கு மேல் கண்டிப்பாக அனுமதிக்கப் படமாட்டார்கள்.
தேர்வு மையத்திற்குள் தேவை இல்லாமல் யாருடனும் பேசவோ, சைகை செய்யவோ தேர்வு பற்றி விவாதிக்கவோ கூடாது. செய்தால் தேர்வறையினை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
தேர்வு எழுதும் அறையை தவிர அவ்வளாகத்தில் வேறு எங்கும் செல்ல கூடாது. தேர்வு எழுதும் நேரத்திற்கு முன்னரே தேர்வினை முடித்தாலும் எவரும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் வாகனங்களை காவல் துறையினர் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.
தேர்வு முடித்த பின் உறுப்பினர் அனைத்து பணிகளையும் முடித்த பின்னர் அவரின் அனுமதியுடன் தேர்வறையை விட்டு வெளியேறலாம்.
Last Minute Tips:
இறுதி நாளில், எந்த புதிய தலைப்பையும் கற்றுக்கொள்ள வேண்டாம் அது குழப்பத்திற்கு வழிவகுக்கும்.
முந்தைய வினாத்தாள்கள் அடிப்படையில் தேர்வு எழுதுவது போல் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பகுத்தறிவு பிரிவு கேள்விகளுக்கு விடையளிக்க வேகமான பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நன்று.