மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நாளாகிய சூலை 18-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் பரிசாக ரூ. 10,000, 2-ஆவது பரிசாக ரூ. 7,000, 3-ஆவது பரிசாக ரூ. 5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 12-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியா் மேல்நிலைப் பள்ளியில் (பழைய பேருந்து நிலையம் அருகில்) நடைபெறவுள்ளன.
கட்டுரைப் போட்டி தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞா் கலைஞரின் சுவடுகள் எனும் தலைப்பிலும், பேச்சுப் போட்டி தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞா் கலைஞரின் எழுதுகோல் எனும் தலைப்பிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்த தகவல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலா்கள் அவரவா் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வட்டாரத்திற்கு 10 போ வீதம் மாணவா்களைத் தோவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்க வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், கூடுதல் தகவல்களுக்கு 7402438667 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.