குரூப்
-1 முதல்நிலை
தேர்வு-‘கீ ஆன்சர்’
வெளியீடு–ஏதேனும்
Objection இருப்பின்
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்
வருவாய்
கோட்டாட்சியர் (துணை
ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி,
வணிகவரி உதவி ஆணையர்,
கூட்டுறவு சங்கங்களின் துணை
பதிவாளர், ஊரக வளர்ச்சி
உதவி இயக்குநர் உள்ளிட்ட
பதவிகளில் 66 காலியிடங்களை நிரப்பும்
வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுகடந்த 3-ம் தேதி
நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம்
முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரம்
பேர் எழுதினர்.
இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபம் (Objection) இருப்பின் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள், ஜன.14-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.