சுயதொழில் புரிய
விரும்புபவர்கள் அஞ்சலக
முகவராகலாம்
இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம்
கூட இல்லாத, சில
பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய இடங்களில் அஞ்சலகங்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, அஞ்சலக
முகவர்களை உருவாக்குவதுடன், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.
இதன்படி
அஞ்சலக முகவர் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தை யார் வேண்டுமானலும் பயன்படுத்தி பயனடையலாம்.
1.அஞ்சலகங்கள் திறக்க
இயலாத இடங்களில், விற்பனை
பிரதிநிதிகள் மூலம்
அஞ்சலக சேவை (Counter services
) வழங்கப்படும்.
2. கிராமப்புற மற்றும்
சிறுநகரங்களில், வீடுகளுக்குச் சென்று தபால் தலைகள்
மற்றும் அஞ்சலகப் பொருட்களை
விற்பனை செய்யும் முகவர்கள்
(Postal Agents)
முகவராவது எப்படி? (How to
apply)
விண்ணப்பதார்கள், இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முகவர்களுடன், அஞ்சகலத்துறை ஒரு
ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும். அதில்
விற்பனைக்கு வழங்கப்படும் கமிஷன்
குறித்த விபரங்கள் இடம்பெறும்.
பொதுமக்களின் தேவை அறிந்து, அஞ்சலகப்
பொருட்களைக் கொண்டு சென்று
விற்பனை செய்யும் திறமை
படைத்தவர்களுக்கே வாய்ப்பு
வழங்கப்படும்.
வயது (Age): 18 வயது பூர்த்தியான அனைவரும் தகுதியுடையவர்கள். உச்சபட்ச
வயது வரம்பு கிடையாது.
தகுதி (Qualification): 8ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன்னுரிமை (Preference): ஓய்வு பெற்ற தபால் அலுவலர்கள், கனினி வசதியுடையவர்கள்
விபரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf
வழங்கப்படும் கமிஷன் (Commission Offered): தேர்வு செய்யப்படும் முகவர்களுக்கு பின்வரும் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.
தலா ஒரு ரெஜிஸ்டர் போஸ்ட் – ரூ.3
தலா ஒரு ஸ்பீட் போஸ்ட் – ரூ.3
ரூ.100 முதல் ரூ.200 வரையிலான மனி ஆர்டர் – ரூ.3.50
ரூ.200க்கும் மேற்பட்ட மனி ஆர்டர் – ரூ.5
அஞ்சலக தபால்தலைகள், மனி ஆர்டர் விண்ணப்பம்– 5% கமிஷன்
தேர்வு செய்யப்படும் முகவர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியது கட்டாயம்.