வீட்டிலிருந்தே Tomato Ketchup தயார்
செய்யும்
சுயதொழில் பற்றி பார்க்கலாமா??
Tomato Ketchup செய்ய மூலப்பொருட்கள்:
7
கிலோ செய்வதற்கு அளவுகள்
தக்காளி
– 25 கிலோ
சீரகம்
– 10 கிராம்
வெங்காயம்
– 375 கிராம்
பூண்டு
– 150 கிராம்
கிராம்பு
– 25 கிராம்
ஏலக்காய்
– 15 கிராம்
பட்டை
– 25 கிராம்
Sodium Benzoate – 3.5
or 4 கிராம்
Acetic Acid – 35 கிராம்
முதல் 40 கிராம் வரை
இந்த மூலப்பொருள்களுக்கு குறைந்தபட்சம் 3000 ரூபாய்
தேவைப்படும்.
Tomato Ketchup செய்முறை:
தக்காளி
பழத்தினை நன்றாக சுத்தம்
செய்து பெரிய பாத்திரத்தில் நன்றாக வேகவைத்து எடுக்க
வேண்டும். பின் தக்காளியை
வடிகட்டி நன்றாக ஆறவைக்கவும்.
தக்காளி
ஆறுவதற்கு முன் பட்டை,
கிராம்பு, ஏலக்காய் சீரகம்
இவை அனைத்தையும் நன்றாக
இடித்து ஒரு சுத்தமான
வெள்ளை துணியில் கொட்டுங்கள்.
பிறகு
பூண்டு மற்றும் வெங்காயத்தை நன்றாக இடித்து இத்தனையும் அந்த துணியில் சேர்த்து
நன்றாக கொட்டிக்கொள்ளுங்கள்.
தக்காளி
நன்றாக ஆறியதும் நன்றாக
கரைத்து கொள்ளுங்கள், பிறகு
அதனை வடிகட்டி ஜூஸை
மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
ஜூஸினை
திரும்ப அடுப்பில் வைத்து
சுண்ட காய்ச்ச வேண்டும்,
தக்காளி ஜூஸினை காய்ச்சும் பொழுது இடித்து கட்டி
வைத்துள்ள பொருட்களை அந்த
துணியுடன் அப்படியே தக்காளி
ஜூஸில் சேர்த்து காய்சவேண்டும். இவ்வாறு துணியில் கட்டி
காய்ச்சுவதினால் அவற்றில்
உள்ள எசன்ஸ் தக்காளி
சாறுடன் சேர்ந்து Tomato Ketchup சுவை
கிடைக்கும்.
பிறகு ஜூஸ் கொதிச்சி கொண்டிருக்கும் பொழுது அதனுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் உப்பினை சேர்த்து நல்ல கெட்டியாக காய்ச்ச வேண்டும்.
ஒரு பிளேட்டில் இதனை கொட்டினால் அப்படியே பசை மாதிரி இருக்கனும். அந்த பதத்திற்கு இந்த Tomato Ketchup-ஐ நன்றாக காய்ச்ச வேண்டும்.
இறுதியாக Sodium Benzoate, Acetic Acid சேர்த்து காய்ச்ச வேண்டும். Acetic Acid எதற்காக சேர்க்கப்படுகிறது என்றால் Tomato Ketchup கெட்டு போகாமல் இருப்பதற்கு.
Tomato Ketchup தயார்.
பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
பேக்கிங் செய்வதற்கு என்று அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் sauce packaging bottles விற்பனை செய்யப்படுகிறது.
முதலீடு: குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் முதலீடாக தேவைப்படும்.
விலை நிர்ணயம்: பேக்கிங் செய்வதை பொறுத்து விலை நிர்ணயம் மாறுபடும் (பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதாக இருந்தால் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதாக இருந்தால் 25 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்)
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.