HomeBlogஅரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப முடிவு
- Advertisment -

அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப முடிவு

Decision to fill postgraduate teacher vacancies in government schools

அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப
முடிவு

அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பதவியில்,
வரும் கல்வியாண்டில் (2021-2022) ஏற்படும்
காலியிடங்களையும் நிரப்ப
பள்ளிக்கல்வித் துறை
முடிவுசெய்துள்ளது.

உத்தேச
காலியிடங்களை பள்ளிக்கல்வி இணை இயக்குநரிடம் நேரில்
சமர்ப்பிக்குமாறு முதன்மை
கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை
பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி
ஆசிரியர் பதவிகளில் ஏற்படும்காலியிடங்கள் 50 சதவீதம் பதவி
உயர்வு மூலமாகவும் எஞ்சிய
50
சதவீதம் போட்டித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த
வகையில், கடந்த 2018-2019-ம்
கல்வி ஆண்டுக்கான நேரடி
பணி காலியிடங்களுக்கான முதுகலை
ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு
வாரியம்மூலம் அண்மையில்
தேர்வுசெய்யப்பட்டனர்.

அடுத்த
கட்டமாக, 2019-20, 2020-21 ஆகிய
கல்வி ஆண்டுகளுக்குரிய காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். நடப்பு
கல்வி ஆண்டில் (2020-21) அரசு
பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்து
18
ஆயிரம் பேர் சேர்ந்திருப்பதால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதியகாலியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பணிநியமனம் நடைபெறக்கூடும். இந்த நிலையில், வரும்கல்வி ஆண்டில் அதாவது 2021-22-ம்
ஆண்டில் முதுகலை பட்டதாரி
ஆசிரியர் மற்றும் உடற்கல்விஇயக்குநர் (Grade-1) பதவிகளில்ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கான ஆயத்தப் பணிகளில்பள்ளிக்கல்வித் துறை
ஈடுபட்டு வருகிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர்
அனைத்து மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2021-22.ம்
கல்வி ஆண்டில் ஏற்படும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குநர் (Grade-1)காலிப்பணியிடங்களை நிரப்ப, காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச
மதிப்பீட்டை மெயிலில்
அனுப்பிவிட்டு அதன்
பிரதியை 18-ம் தேதி
நேரடியாக இணை இயக்குநரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று
அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே,
ஏறத்தாழ 3,500 முதுகலை பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களை நேரடித்தேர்வு மூலம்நிரப்புவதற்கான பணிகள்
மும்முரமாக நடைபெற்று வரும்
நிலையில், வரும் கல்வி
ஆண்டுக்கான காலியிடங்களின் விவரமும்
கேட்கப்பட்டிருப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -