செல்லிடப்பேசி பழுது
நீக்கும் பயிற்சி
பெங்களூரில் January 25-ஆம் தேதி
முதல் செல்லிடப்பேசி பழுது
நீக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கை:
பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் 4 வாரகால செல்லிடப்பேசி பழுதுநீக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி
அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி January 25-ஆம் தேதி
தொடங்குகிறது.
பயிற்சிக்
காலத்தில் செல்லிடப்பேசி மென்
பொருள், வன் பொருள்
பழுதுநீக்குதல் போன்றவை
கற்றுத்தரப்படும். ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அணைத்து செல்லிடப்பேசிகளின் பழுதையும் நீக்குவது
கற்பிக்கப்படும். வெளியூா்
மாணவா்களுக்கு இலவச
தங்குவிடுதி வழங்கப்படுகிறது.
பயிற்சி மாணவா்களுக்கு இலவசமாக பாடநூல்கள், கருவிகள் பெட்டி, மென்பொருள்கள் வழங்கப்படும். பயிற்சியில் சேர பியூசி தோ்ச்சி அல்லது தோல்வி, பட்டயம், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்றிருத்தல் அவசியம்.
January 23.ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 95351 42052, 98452 21703 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.