இஸ்ரோ
வழங்கும்
இலவசப் பயிற்சி
இந்திய
விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
இளங்கலை மாணவர்களுக்கு ரிமோட் சென்சிங், ஜிஐஎஸ்
மற்றும் ஜிஎன்எஸ்எஸ் தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த 15 வார இலவச
ஆன்லைன் பயிற்சியை வழங்குகிறது. இந்த
பயிற்சிக்கான பாடத்திட்டத்திற்கு அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி கவுன்சில்
(ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்துள்ளது.
77.5 மணி
நேரம் வழங்கப்படும் இந்த
பயிற்சியில், ரிமோட் சென்சிங்,
குளோபல் நேவிகேஷன், செயற்கைக்கோள் அமைப்பு , புவி தகவல்
அமைப்பு மற்றும் புவி
தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றி கற்றுக் கொடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் விருப்பம்
போல தனிப்பட்ட படிப்புகளுக்கோ அல்லது அனைத்து படிப்புகளுக்குமோ பதிவு செய்து
கொள்ளலாம்.
ரிமோட் சென்சிங் மற்றும் டிஜிட்டல் படங்கள் பகுப்பாய்வு:
ரிமோட்
சென்சிங், புவி கண்காணிப்பு சென்சார்கள் மற்றும் தளங்கள்
, வெவ்வேறு நிலப்பரப்புகளில் அம்சங்கள்,
அவற்றின் ஸ்பெக்ட்ரல் கையொப்பம்,
படவிளக்கம், வெப்பம் மற்றும்
மைக்ரோ வேவ் ரிமோட்
சென்சிங் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள் இந்தப் பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்படும்.
அத்துடன்
ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தம், புதிய பதிவு,
மேம்பாடு, துல்லியம் மற்றும்
மதிப்பீட்டு நுட்பங்களும் கற்றுக்
கொடுக்கப்படும்.
குளோபல் நேவிகேஷன் சேட்டலைட் சிஸ்டம்:
இதில்
ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ், ரிசீவர்,
செயலாக்க முறைகள், பிழைகள்
மற்றும் துல்லியம் குறித்து
கற்றுக் கொடுக்கப்படும்.
புவி தகவல் அமைப்பு:
இதில்
ஜிஐஎஸ் தரவுத்தளங்கள், டோபாலஜி
இடம் சார்ந்த பகுப்பாய்வு மற்றும் அது தொடர்பான
மென்பொருள் குறித்து கற்றுக்
கொடுக்கப்படும்.
ஆர்எஸ் மற்றும் ஜிஐஎஸ் பயன்பாடுகள்:
இதில்
விவசாயம், மண், வனவியல்,
சூழலியல், புவி அறிவியல்,
பூமியில் ஏற்படக்கூடிய அபாயங்கள்,
கடல் மற்றும் வளிமண்டல
அறிவியல், நகர்ப்புற மற்றும்
வட்டார ஆய்வுகள், நீர்
வளம் போன்றவை குறித்து
கற்றுக் கொடுக்கப்படும். அத்துடன்
மென்பொருள்களைப் பயன்படுத்தி செயல்முறை விளக்கமும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும்.
இந்த
பயிற்சி வகுப்புகளை இந்திய
ரிமோட் சென்சிங் நிறுவனம்
(ஐஐஆர்எஸ்) நடத்துகிறது.
இந்தப்
பயிற்சி வகுப்புகள் ஜனவரி
20-ல் தொடங்கி மே
5 வரை நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்களை இந்தப்
பயிற்சிக்கு ஜனவரி 31க்குள்
இணைத்துக்
கொள்ளலாம்.