MTS – 1198 பணியிடங்கள் மற்றும் Havaldar in CBIC and CBN – 360 பணியிடங்கள் என மொத்தம் 1558 பணியிடங்கள் காலியாக உள்ளன. 01-08-2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களை இறுதித் தேதிக்கு முன்னதாக அதாவது 21.07.2023 க்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும். இணைப்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்க்க கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க முடியாது என்று SSC தெரிவித்துள்ளது.