HomeBlogவீட்டில் இருந்தபடியே பொம்மை தயாரிப்பு தொழில்
- Advertisment -

வீட்டில் இருந்தபடியே பொம்மை தயாரிப்பு தொழில்

வீட்டில் இருந்தபடியே பொம்மை தயாரிப்பு தொழில்

வீட்டில் இருந்தபடியே பொம்மை தயாரிப்பு தொழில்
கை தையல் மூலமாகத்தான் தயார் பொம்மை செய்ய வேண்டியதாக இருக்கும். பெரிய பொம்மைகளை தயார் செய்வதற்கு மட்டும் தையல் மெஷின் மூலம் தைக்க வேண்டியதாக இருக்கும்.
வீட்டின் ஒரு சிறிய அறை இருந்தால் போதுமானது. chart paper, வெல்வெட் துணி, துணிகளை வெட்ட ஒரு டேபிள், பொருட்களை வைக்க அலமாரி, பெரிய கத்தரி 1, சிறிய கத்தரி 2, பிளாஸ்டிக் டிரே 2, செலோ டேப் ஸ்டாண்ட்.
இந்த பொம்மை தயாரிப்பு தொழிலை துவங்குவதற்கு குறைந்தபட்சம் கிட்டத்தட்ட ரூ.10,000/- தேவைப்படும்.
(Fur cloth, அதன் திடத்திற்கேற்ப மீட்டர் ரூ.400 முதல் ரூ.450 வரை இப்போது அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கின்றது அங்கு ஆர்டர் செய்து இவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
செயற்கை பஞ்சு (Fiber cotton) கிலோ ரூ.100, (ஒரு மீட்டர் Fur cloth, ஒரு கிலோ செயற்கை பஞ்சு மூலம் 100 பொம்மைகள் செய்யலாம்).
சிறிய பொம்மை செய்ய ரூ.20ம், பெரியவை செய்ய பொம்மை செய்ய ரூ.40 வரை செலவாகும். ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) சிறிய பொம்மைகள் 40, பெரியவை 20 தயாரிக்கலாம்.
பொம்மை தயாரிக்கும் முறை:
பொம்மைகளை மார்பு பகுதி வரை தயாரித்தால் போதுமானது. நாய், பூனை, கரடி, குரங்கு குட்டிகள், குழந்தை வடிவங்களில் தேவையான அளவுகளில் பொம்மைகளை தயாரிக்கலாம்.
பொம்மையை உருவாக்க, தேவையான தையல் அளவுகளை சார்ட் பேப்பரில் உருவாக்கி கொள்ள வேண்டும்.
கை, உடல், முகம் ஆகிய பாகங்களை கொண்டிருக்கும். அவற்றை கொண்டு தைக்க வேண்டிய ஃபர் துணிகளின் பின்புறம் வைத்து மார்க்கர் பேனாவால் அவுட்லைன் வரைந்து வெட்டி கொள்ள வேண்டும்.
வெட்டியவற்றின் உட்புறமாக கை தையல் போட வேண்டும். அதை கெட்டி தையல் என்பார்கள். தைக்காமல் விட்ட பகுதி வழியாக செயற்கை பஞ்சை சமமாக பரவும்படி திணித்து உள்புறத்தை நிரப்ப வேண்டும். பொம்மைக்கு கண், மூக்கு பட்டன்களை பொருத்த வேண்டும்.
சில பொம்மைகளுக்கு கூடுதலாக காது, வாய் பட்டன்களையும் பொருத்தலாம். பொம்மையின் கீழ் பகுதி வட்டமாக திறந்திருக்கும், அதை கூடையின் மேல் திறப்பை மூடும் அளவிற்கு வட்டமாக வெட்டிய சார்ட் பேப்பர் துண்டுகளில் வைத்து, விளிம்புகளில் பசை தடவி ஒட்டி மூட வேண்டும். இப்போது பொம்மை தயார்.
பொம்மைகளை தங்களுடைய கலைத்திறனுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, விற்பனைக்கு அனுப்பலாம்.
சிறிய பொம்மைகளை ரூ.100.க்கும், பெரிய பொம்மைகளை ரூ.150.க்கும் விற்பனை செய்யலாம். கலைநயத்துடன் தயார் செய்த சிறிய மற்றும் பெரிய பொம்மைகளுக்கு தனி விலையை நிர்ணகித்து விற்பனை செய்யலாம்.
சந்தை வாய்ப்பு:
தற்போது சிறிய ஊரில் கூட நிறைய பேன்சி ஸ்டோர், கிப்ட் கடைகள் வந்து விட்டது. எனவே உங்கள் ஊரில் கூட தயார் செய்த பொம்மைகளை அந்த கடைகளுக்கு சென்று விற்பனை செய்யலாம். இல்லையெனில் தாங்களே நேரடியாக மக்களிடம் விற்பனை செய்யலாம்.

இது விலை குறைந்த பரிசுப்பொருள் என்பதால் நிறைய பேர் இவற்றை விரும்பி வாங்குவார்கள்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -