Wednesday, December 18, 2024
HomeBlogமாணவர்களுக்கு வருடம் ரூ. 2 லட்சம் உதவித்தொகை
- Advertisment -

மாணவர்களுக்கு வருடம் ரூ. 2 லட்சம் உதவித்தொகை

Rs. 2 lakh scholarship for Students

மாணவர்களுக்கு வருடம்
ரூ. 2 லட்சம் உதவித்தொகை

IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்தியப்
பல்கலைக்கழகங்களில் பயிலும்
தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு சார்பாக
வருடந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2020 – 2021 ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம் என
கோவை மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்:

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் உயர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறதுஇந்த ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவர்களின் குடும்ப வருமானம் 2 லட்சத்திற்கு அதிகமானதாக இருக்கக்கூடாது.

இந்த ஆண்டு புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்கடைசி தேதி பிப்ரவரி மாதம் 15 ஆகும்.

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -