வேலைவாய்ப்பற்றோர் உதவித்
தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு–கிருஷ்ணகிரி
இது குறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்து தொடர்ந்து 5 ஆண்டுகள்
புதுப்பித்து எவ்வித
வேலை வாய்ப்பும் கிடைக்காத,
படித்த இளைஞர்களுக்கு தமிழக
அரசால் மாதம்தோறும் உதவித்
தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்
ரூ.200ம், அதுவே
மாற்றுத் திறனாளிகளாக இருப்பின்
மாதம் ரூ.600ம்,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மாதம்
ரூ.300ம், அதுவே
மாற்றுத் திறனாளிகளாக இருந்தால்
மாதம் ரூ.600-ம்,
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம்
ரூ.400ம், அதுவே
மாற்றுத் திறனாளிகளாக இருப்பின்
மாதம் ரூ.750ம்,
பட்டதாரிகளுக்கு மாதம்
ரூ.600-ம், அதுவே
மாற்றுத் திறனாளிகளாக இருப்பின்
மாதம் ரூ.1000ம்
வழங்கப்படுகிறது.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதி விறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை. விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, உரிய இணைப்புகளுடன் சேர்த்து, கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளித்திட வேண்டும்.