HomeBlogராணுவ ஆட்சேர்ப்பு முகாம்-ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிடப்பட்ட நுழைவுசீட்டுடன் வரும் நபர்கள் மட்டுமே முகாமில்...
- Advertisment -

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்-ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிடப்பட்ட நுழைவுசீட்டுடன் வரும் நபர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்

Military Recruitment Camp - Only persons with tickets issued from January 1 will be allowed to attend the camp.

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்ஜனவரி 1ம்
தேதி முதல் வெளியிடப்பட்ட நுழைவுசீட்டுடன் வரும்
நபர்கள் மட்டுமே முகாமில்
பங்கேற்க அனுமதிக்கப்படுவர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய
ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் திங்கட்கிழமை (ஜனவரி
18)
முதல் தொடங்கி உள்ளது.
இது வரும் ஜனவரி
30
ம் தேதி வரை
தொடர்ந்து நடைபெறும் என
மாவட்ட ஆட்சியர் அறிவித்து
உள்ளார்.

இந்த
முகாமில் ஏற்கனவே பதிவு
செய்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே
பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள் எனவும்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய
ராணுவத்தில் உள்ள பல்வேறு
காலிப்பணியிடங்களுக்கு நேரடி
ஆட்சேர்ப்பு முகாம் மூலம்
தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படுகின்றனர். கோவையில்
நடைபெற்று வரும் முகாமில்
தொழில்நுட்ப பிரிவு வீரர்,
நர்சிங் அசிஸ்டன்ட், பொதுப்பணி
வீரர், கிளார்க் / ஸ்டோர்
கீப்பர் டெக்னிக்கல் மற்றும்
ட்ரேட்ஸ்மேன் போன்ற
பணிகளுக்கு நபர்கள் தேர்வு
செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான முகாம் கடந்த
ஆண்டு மே மாதமே
நடைபெற வேண்டி இருந்தது.

ஆனால்
கொரோனா பரவல் அச்சம்
காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 18ம்
தேதி முதல் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்:

கோயம்புத்தூர்நீலகிரிஈரோடுதிண்டுக்கல்மதுரைதேனிதிருப்பூர்கிருஷ்ணகிரிதர்மபுரிசேலம்நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்இதற்காக www.joinindianarmy.nic.in என்ற வலைதள பக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

எனவே ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிடப்பட்ட நுழைவுசீட்டுடன் வரும் நபர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்மேலும் இந்த ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வரும் ஜனவரி 30ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -