வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் பல்வேறு தொழில் யோசனைகள்
சமையல்
கலை:
இன்று
வீட்டுச் சாப்பிட்டிற்கு ஏங்குவோர்
பலர் உள்ளனர். ஆன்லைனில்
வீட்டுச் சுவையைத் தேடி
தேடி சாப்பிடும் இளைஞர்கள்தான் அதிகம். நீங்கள் சமையலில்
அசத்துபவர் என்றால் ஆன்லைன்
Food Delivery
App.களில் பதிவு செய்து
கொண்டு வீட்டிலேயே சமைத்து
உணவுகளை ஆர்டர் பெற்று
விற்பனை செய்யலாம்.
தனிநபர் தங்கள் வீடுகளில் உணவை சமைத்து, விற்பனை செய்ய மாநிலத் துறையின் ஒப்புதலை அல்லது உணவுப் பாதுகாப்புத்துறையின் ஒப்புதலைப் பெற்று உரிமம் பெற வேண்டும்: Click
Here
தையற்கலை:
உங்களுக்கு ஏற்கனவே தையற்கலை தெரியுமென்றால் தையல் பயிற்சி அளிக்கலாம். இன்றைய சுடிதார், பிளவுஸ்
என்றில்லாமல் குர்தா,
ஷார்ட் டாப்ஸ், அனார்கலி
என காலகட்ட ஆடை
மாற்றங்களுக்கு ஏற்ப
உங்களின் திறமையை மேம்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு பயிற்சி
அளிக்கலாம். தெரியாது என்றால்
கற்றுக்கொண்டு வீட்டிலிருந்தே ஆடைகள் தைத்து சம்பாதிக்கலாம்.
Instagram Marketing:
ஆன்லைன்
பிஸ்னஸ்தான் இன்று களைகட்டுகிறது. இதற்கு பெரிய அளவில்
செலவுகள் இல்லை. ஆடைகள்,
நகைகள், வீட்டு பொருட்கள்
இப்படி எதுவாக இருந்தாலும் குறைந்த அளவில் முதலீடு
செய்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்,
வாட்ஸப்பில் விற்பனை செய்யலாம்.
இன்று பல பெண்கள்
தொழில் முனைவோர்களாக இருக்க
இந்த சமூக வலைதளங்களே காரணம். கடை வாடகை
எடுத்து பொருட்களை விற்பனை
செய்து லாபம் ஈட்டுவதை
விட இப்படி ஸ்மார்ட்டாக யோசியுங்கள்.
நிகழ்ச்சி
நிர்வாகம்:
ஈவண்ட்
மேனேஜ்மெண்ட் என்று
சொல்லக் கூடிய இதுவும்
இன்று டாப் பிஸ்னஸ்தான். அலுவலக நிகழ்ச்சிகள், திருமணம்,
பர்த் டே என
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு சில குழுக்கள்
இருக்கின்றன. அவர்களை அணுகி
எப்படி வேண்டும் என
சொன்னால் போதும் நம்முடைய
பட்ஜெட்டிற்கு ஏற்ப
சிறப்பாக செய்து கொடுப்பார்கள். நாமும் டென்ஷன்களை தலையில்
போட்டுக்கொள்ளாமல் உறவினர்களை போல் சென்றால் மட்டும்
போதும். உறவினர்களை புன்னகையோடு கை கூப்பி அழைத்தால்
போதும் எல்லாம் அவர்களே
பார்த்துக்கொள்வார்கள். இந்த
நிகழ்ச்சி நிர்வாகம் தொழிலையும் நீங்கள் வீட்டில் இருந்த
படியே குழுவை மட்டும்
அமைத்தால் போதும். சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து
ஆர்டர்களைப் பெறலாம். இதற்கு
முதலில் உங்கள் உறவினர்களின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை ஆர்டர் எடுத்து பயிற்சி
செய்து கொள்ளுங்கள்.
Freelancer:
எழுத்தும்
இன்று தொழில்தான். உங்களுக்கு எழுதுவதில் விருப்பம் இருந்தால்
பத்திரிகைகளுக்கு எழுதி
பணம் சம்பாதிக்கலாம். அதேபோல்
ஆன்லைனில் டிரான்ஸ்லேட்டர்களும் தேவைப்படுகிறார்கள். அப்படி நீங்கள்
வீட்டிலிருந்தே எந்த
முதலீடும் இன்றி மொழிபெயர்ப்பாளராக பணியாற்றலாம்.
யோகா
பயிற்சி:
நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் பலரும்
நிம்மதி, அமைதியைத் தேடி
அலைகின்றனர். அதில் பலரும்
தேர்வு செய்வது யோகா
பயிற்சி. உங்களுக்கு யோகா
தெரியுமெனில் வீட்டிலிருந்தபடியே யோகா பயிற்சி
எடுக்கலாம். இதிலும் நல்ல
லாபம் ஈட்டலாம். அதிக
முதலீடும் இருக்காது. அமைதியான
சூழல், விசாலமான இடம்
இருந்தால் போதும்.
Graphic Designing:
பல
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கம்பெனிகள் தங்களுக்கென இணையதளம்
உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்களைப்
போன்றோருக்கு வீடிலிருந்தே இணையதளம் உருவாக்கிக் கொடுக்க
கிராஃபிக் டிசைனர்கள்தான் இன்று
தேவைப்படுகின்றனர். நீங்கள்
அதில் வல்லவர் எனில்
வீட்டிலிருந்தே செய்து
கொடுக்கலாம் அல்லது ஆர்டர்களை
பெறும் திறமை இருந்தால்
கிராஃபிக் டிசைனிங் தெரிந்தவர்களை குழுவாக அமைத்து அவர்களை
நிர்வகிக்கலாம்.