சக்ஷம், பிரகதி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
பொறியியல்
பயிலும் பெண்கள் சக்ஷம்,
பிரகதி திட்டங்களின் கீழ்
கல்வி உதவித் தொகை
பெற ஜன.31-ஆம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என AICTE
தெரிவித்துள்ளது.
இது
தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி
குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல்
படிப்புகளில் உயா்கல்வி
பயிலும் மாணவிகளுக்கு AICTE
சார்பில் பிரகதி மற்றும்
சக்ஷம் திட்டங்களின்கீழ் ஆண்டுதோறும் கல்வி AICTE தொகை
வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு
பிரகதி, சக்ஷம் கல்வி
உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்,
ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறும் மாணவிகள் விண்ணப்பங்களைப் புதுப்பித்துக் கொள்ள
வாய்ப்பு அளிக்கப்பட்டது.
விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் ஜன.31-ஆம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள்
வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல்
விவரங்களை வலைதளத்தில் அறிந்து
கொள்ளலாம்.