வனக் காப்பாளர்
பணி தேர்வானோர் பட்டியல்
வன
காப்பாளர் பணிக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை,
வனத்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள வன
காப்பாளர் பணியிடங்களை நிரப்ப,
ஆன்லைன் தேர்வு, 2020 மார்ச்சில் நடந்தது.
இதில்
தேர்ச்சி பெற்றவர்களில் 1:3 என்ற
அடிப்படையில் உத்தேச
வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதில்
இடம் பெற்றவர்களுக்கு, ஜன.,
5, 6, 7 தேதிகளில் சான்றிதழ் சரிபார்த்தல், 19ல் உடல் திறன்
தேர்வு நடத்தப்பட்டது.
இதில்
பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தற்காலிக தேர்வு பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது.இப்பட்டியல் தற்போது வனத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு
எண், பிறந்த தேதி
விபரங்களை, www.forests.tn.gov.in என்ற
இணையதளத்தில் உள்ளீடு
செய்து தெரிந்துக் கொள்ளலாம்.
இதையடுத்து காத்திருப்போர் பட்டியல்
விரைவில் வெளியிடப்படும்.
Tamil Nadu Forest Guard With Driving Licence Selected list PDF