திருவண்ணாமலையில் புதன்கிழமை (ஜூலை 13) விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், புதன்கிழமை (ஜூலை 13) காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் 04175-298258 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.