தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி
இந்திய
அரசு மத்திய பனைப்
பொருட்கள் நிறுவனம், கேவிஐசி
சார்பில் ஈரோட்டில் தங்க
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
நாளை (28ம் தேதி)
முதல் பிப்.6ம்
தேதி நடக்கிறது.
தங்கத்தின் விலை கணக்கிடும் முறை,
கொள்முதல் செய்யும் முறை,
உரைகல்லில் தங்கத்தின் தரம்
அறிதல், கடன் தொகை
வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதம்
குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 வயது நிரம்பிய
இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
குறைந்தது
8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். செய்முறை பயிற்சி
இறுதியில் இந்திய அரசு
சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி
முடித்தவர்கள் தேசிய,
கூட்டுறவு மற்றும் தனியார்
வங்கிகள் மற்றும் நகை
அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளர் பணியில்
சேரலாம்.
சுயமாக
நகை கடை, நகை
அடமான கடை நடத்த
தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில்
சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் 2 ஸ்டாம்ப்
சைஸ் போட்டோ, முகவரி
மற்றும் கல்வி சான்றிதழுடன் பயிற்சி கட்டணம் ரூபாய்
6,254 உடன் நேரில் அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு,
மேட்டூர் ரோட்டில் உள்ள
ஜெம் அண்டு ஜுவல்லரி
டெக்னாலஜி டிரெய்னிங் சென்டர்
அல்லது 9443728438 என்ற
அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.