திறன் பயிற்சி
மையம் அமைப்பு–ஆண்டுக்கு
350 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது
டிக்ஸி
டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்
மற்றும் டாஸ்மா அமைப்புடன் இணைந்து, திருப்பூரில் தொழிலாளர்
திறன் மேம்பாட்டு மையத்தை
உருவாக்கியுள்ளது.
இதனை
திறந்து வைத்து, போலீஸ்
ஏ.டி.எஸ்.பி.,
ஜெயச்சந்திரன் பேசுகையில், சில நிறுவனங்களே, தங்கள்
தொழிலாளர் திறனை மேம்படுத்த வாய்ப்பு அளிக்கிறது; அதில்,
டிக்ஸி நிறுவனம் முன்னிலைவகிக்கிறது, என்றார்.
டிக்ஸி
நிறுவனத்தினர் கூறியதாவது:
கடந்த
35 ஆண்டுகளாக, டிக்ஸி நிறுவனம்,
திருப்பூரில் இயங்கிவருகிறது. தொழிலாளர்களை மேம்படுத்துவதில், நிறுவனம் எப்போதும்
தனித்துவமாக உள்ளது.
தற்போது,
தொழிலாளர் திறன் மேம்படுத்துவதற்காக, நிறுவனத்திலேயே, பயிற்சி
மையம் உருவாக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு,
350 பேருக்கு பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால்,
தொழிலாளர்களின் ஆடை
உற்பத்தி சார் திறன்
மேம்படும், இதன்மூலம், அவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது, குடும்ப பொருளாதாரமும் மேம்படும்.